அளவீடு

 அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு என் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும்.


1. தெரிந்த ஒரு அளவை கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவதற்கு பெயரென்ன?
Answer : அளவீடு

2. ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: நீளம்

3. நீளத்தின் அலகு என்ன?
Answer: மீட்டர்

4. நீளத்தின் குறியீடு என்ன?
Answer: மீ(m)

5. ஒரே மாதிரியான அளவிட்டு முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலகு முறை எது ?
Answer: பன்னாட்டு அலகு முறை (international system of units) அல்லது SI அலகு முறை

6. நீளத்தின் SI அலகு என்ன?
Answer: மீட்டர்

7. நிறையின் SI அலகு என்ன?
Answer: கிலோகிராம்

8. காலத்தின் SI அலகு என்ன?
Answer: வினாடி

9. பரப்பளவின் SI அலகு என்ன?
Answer: மீ^2

10. பருமனின் SI அலகு என்ன?
Answer: மீ^3

11. டெசி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
Answer: d & துணை பன்மடங்கு: 1/10

12. சென்டி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
Answer: c & துணை பன்மடங்கு: 1/100

13. மில்லி முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
Answer: m & துணை பன்மடங்கு: 1/1000

14. நானோ முன்னொட்டின் குறியீடு மற்றும் துணை பன்மடங்கு என்ன?
Answer: n & துணை பன்மடங்கு: 1/1000000000

15. கிலோ முன்னொட்டின் குறியீடு மற்றும் பன்மடங்கு என்ன?
Answer: Kg & துணை பன்மடங்கு: 1000

16. 10 டெசி மீட்டர் எத்தனை மீட்டருக்குச் சமம் ?
Answer: 1 மீட்டர்

17. 100 சென்டிமீட்டர் எத்தனை மீட்டருக்குச் சமம் ?
Answer: 1 மீட்டர்

18. 1000 மில்லிமீட்டர் எத்தனை மீட்டருக்குச் சமம் ?
Answer: 1 மீட்டர்

19. 1000000000 நானோமீட்டர் எத்தனை மீட்டருக்குச் சமம்?
Answer: 1 மீட்டர்

20. 1000 மீட்டர் எத்தனை மீட்டருக்குச் சமம்?
Answer: 1 கிலோமீட்டர்

21. பரப்பளவின் சமன்பாடு என்ன?
Answer: நீளம் x அகலம் X

22. நீளம் என்பது என்ன அலகு?
Answer: அடிப்படை அலகு

23. பருமன் என்பது என்ன அலகு?
Answer: வழி அலகு

24. எதனை அளப்பதன் மூலம் பருமனை அளவிட முடியும்?
Answer: நீளம்

25. பரமனின் அலகு எவ்வாறு குறிக்கப்படும்?
Answer: கன செ.மீ^3 அல்லது செ.மீ^3

26. திரவத்தின் பருமனானது பொதுவாக என்ன அலகில் அளவிடப்படுகிறது?
Answer: லிட்டர்

27. ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அதன் ___ஆகும் ?
Answer: பருமன்

28. திடப்பொருள்களில் பருமன் SI அலகு முறையில் என்ன?
Answer: கனமீட்டர் () மீ^3

29. 1.மி.மீ^3 என்பது எத்தனை மைக்ரோலிட்டருக்கு சமம்?
Answer: 1 மைக்ரோலிட்டர்

30. 1.செ.மீ^3 என்பது எத்தனை மில்லிலிட்டருக்கு சமம்?
Answer: 1 மில்லிலிட்டர்

31. 1.மீ^3 என்பது எத்தனை கிலோலிட்டருக்கு சமம்?
Answer: 1 கிலோலிட்டர்

32. நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் எத்தனை பங்கு?
Answer: ஆறில் ஒரு பங்கு

33. ____ என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவை ஆகும்?
Answer: நிறை

34. ___என்பது நிறையின் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசை ஆகும்?
Answer: எடை

35. நிறையின் SI அலகு என்ன?
Answer: கிலோகிராம்

36. 1 கிராம் எத்தனை மில்லி கிராமுக்கு சமம்?
Answer: 1000 மில்லி கிராம்

37. 1 கிலோ கிராம் எத்தனை கிராமுக்கு சமம்?
Answer: 1000 கிராம்

38. 1 டன் எத்தனை கிலோகிராமுக்கு சமம்?
Answer: 1000 கிலோ கிராம்

39. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
Answer: ஓடோமீட்டர்

40. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் எப்போது உருவாக்கப்பட்டது?
Answer: 1790

41. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் உருவாக்கப்பட்டது?
Answer: பிரஞ்சுக்காரர்கள்

42. நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
Answer: வில்லியம் பெட்வெல், 16ஆம் நூற்றாண்டு

43. எடைகள் மற்றும் அளவீடு களுக்கான அனைத்துலக நிறுவனம் எங்கு உள்ளது?
Answer: பாரிஸ் பிரான்ஸ் நாடு

44. பாரிசில் என்னக் கலவையிலான ஒரு படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது ?
Answer: பிளாட்டினம்- இருடியம் உலோகக்கலவை

45. இந்தியாவில் தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு உள்ளது?
Answer: டில்லி

46. ஒரு கிலோ கிராம் அளவு உலோக கலவையால் ஆன ஒரு நிறை எங்கா வைக்கப்பட்டுள்ளது?
Answer: செவ்ரஸ், பிரான்ஸ்