நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்.

1. எடை உள்ளதும் இடத்தை அடைத்துக் கொள்வதும் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: பருப்பொருள்

2. பருப்பொருட்கள் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
Answer: மூன்று

3. பருப்பொருட்கள் என்னென்ன நிலைகளில் காணப்படுகிறது ?
Answer: திண்மம், நீர்மம் மற்றும் வாயு

4. அணுக்களின் அமைப்பைக் கண்டறிய பயன்படும் கருவிகள் என்னென்ன?
Answer: எலக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி மற்றும் ஊடுபுழை நுட்ப எலக்ட்ரான் உருப்பெருக்கி

5. பருப்பொருட்களின் எந்த நிலை என்பது பூமியில் உள்ள பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல?
Answer: பிளாஸ்மா நிலை

6. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer: பிளாஸ்மா நிலை

7. மிகக் குறைவான தட்பவெட்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை என்ன?
Answer: போஸ் ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்

8. போஸ் ஐன்ஸ்ட்டீன் சுருக்கம் எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது?
Answer: 1995

9. இந்தியாவின் எந்தத் தத்துவ மேதையும் கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரடிஸ்சும் பருப்பொருள் பற்றிய ஒத்த கருத்துக்களை கூறியுள்ளனர்?
Answer: கானடா

10. ஒரு துளி நீரில் எத்தனை நீர் துகள்கள் அடங்கியுள்ளது?
Answer: 10^21

11. பருப்பொருளின் துகள்களுக்கிடையே என்ன விசை உள்ளது?
Answer: ஈர்ப்புவிசை

12. கிடைக்கும் இடத்தை நிரப்பப் பரவும் துகள்களின் தன்மை எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer: விரவுதல்

13. வாயுக்கள் நீர்மமாக மாற்றப்படுவதற்கு என்ன பெயர்?
Answer: வாயுக்கள் நீர்மமாதல்

14. பருப்பொருளின் எந்த நிலை அழுத்தத்திற்கு உட்படாது?
Answer: திண்ம நிலை

15. ஒரே தன்மையான துகள்களால் மட்டுமேயானது எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: தூய பொருள்

16. சிறிய துகள்களால் ஆன அணுக்களால் ஆனது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தனிமம்

17. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: ஒரு சேர்மம்

18. தங்கத்தின் தூய்மை எந்த அலகால் குறிப்பிடப்படுகிறது?
Answer: காரட்

19. தூய தங்கம் எத்தனை காரட் மதிப்புடையது?
Answer: 24 காரட்

20. ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான தொடர்களைக் கொண்ட தூய்மையற்ற பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கலவை

21. தனிமங்களின் வேதியல் அடிப்படையிலான சேர்க்கையில் உருவாவது எவ்வாறு அறியப்படுகிறது?
Answer: சேர்மம்

22. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஈர ஆடைகளிலிருந்து நீரினை வெளியேற்றும் முறைக்கு என்ன பெயர்?
Answer: மையவிலக்கல்

23. மிகச்சிறிய அளவிலான கரையாத திடப் பொருட்களைத் திரவத்திலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறையின் பெயர் என்ன?
Answer: கடைதல்

24. தானியங்களை அவற்றின் தாவர தண்டுகளிலிருந்து பிரிப்பதற்காக விவசாயிகள் தண்டுகளைக் கடினமான பரப்பில் அடிக்கின்றனர் இந்த முறைக்கு என்ன பெயர்?
Answer: கதிரடித்தல்

25. லேசான திடப்பொருள்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு பிரிக்கப்படும் முறைக்கு என்ன பெயர்?
Answer: தூற்றுதல்

26. காந்தத் தன்மை உடைய பொருட்களைக் காந்தத் தன்மையற்ற பொருட்களிலிருந்து பிரிக்கும் முறைக்குப் பெயர் என்ன ?
Answer: காந்த பிரிப்பு முறை

27. நீரால் லேசான மாசுக்கள் நீரில் மிதந்து எடை அதிகம் உள்ள தானியங்கள் நீரில் மூழ்கி அடியில் தங்கும் இந்த முறைக்கு என்ன பெயர்?
Answer: வண்டலாக்குதல்

28. என்ன முறையில் குடிப்பதற்கான நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது?
Answer: எதிர் சவ்வூடு பரவல்