6th tamil First term - தமிழ்க்கும்மி


1. எட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி என்று பாடியவர் யார் ?


Answer :   பெருஞ்சித்திரனார்


2.மேதனி என்பதன் பொருள் யாது ?


Answer :   உலகம்


3.ஊழி என்பதன் பொருள் என்ன ?


Answer :  நீண்டதொருகாலப் பகுதி


4.உள்ளப்பூட்டு என்பதன் பொருள் என்ன ?


Answer :  அறிய விரும்பாமை


5.பெருஞ்சித்திரனார் பிறந்த ஆண்டு எது ?


Answer :  1933


6.பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது ?


Answer :  சேலம் - சமுத்திரம்


7.பெருஞ்சித்திரனார் மாணவ பருவத்தில் நடத்திய கையெழுத்து ஏடு யாது?


Answer :  குழந்தை


8.பெருஞ்சித்திரனார் அருணமணி என்ற பெயரில் நடத்திய கையெழுத்து ஏடு யாது?


Answer :  மலர்க்காடு


9.பெருஞ்சித்திரனார் தென்மொழி என்னும் இதழைத் தொடங்கிய ஆண்டு என்ன?


Answer :  1959


10.பெருஞ்சித்திரனார் வேலூர் சிறையில் இருந்தபோது எழுதிய காவியம் என்ன?


Answer :  ஐயை


11.பெருஞ்சித்திரனார் தென்மொழிக் கொள்கை செயற்பாட்டு மாநாடு நடத்திய ஆண்டு என்ன ?


Answer :  1972


12.பெருஞ்சித்திரனார் பல்வேறு காலக்கட்டங்களில் தாம் எழுதிய உணர்வுப்பாடல்களை 1979 ல் என்னும் பெயரில் 3 தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டார் ?


Answer :   கனிச்சாறு


13.உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கியவர் யார்?


Answer :   பெருஞ்சித்திரனார்


14.பெருஞ்சித்திரனார் தமிழ்நிலம் என்னும் இதழைத் தொடங்கிய ஆண்டு என்ன?


Answer :  1982


15.பெருஞ்சித்திரனார் இயற்றிய கனிச்சாறு என்னும் நூல் தொகுதிகளாக வெளிவந்துள்ளது ?


Answer :  8


16.ஒளி தோன்றி, ஒலி தோன்றி, வாழ்ந்த அந்நாள் தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!” என்று தமிழ் மொழியை வாழ்த்திப் பாடியவர் யார் ?


Answer :  வாணிதாசன்


17.செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்தாலெனப் பிரியும் ?


Answer :  செம்மை +தமிழ்


18.எட்டு + திசை என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ?


Answer :  எட்டுத்திசை