​"1.6 கோடி ரூபாயை உதறிய பிடிவாதம் : நெடுஞ்சாலை நடுவே தனித்தீவான வீடு...!"

சீனாவின் ஷாங்காய் அருகே உள்ள ஜின்சி (Jinxi) பகுதியில் புதிய நெடுஞ்சாலைத் திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் பாதையில் ஹுவாங் பிங் (Huang Ping) என்ற முதியவரின் வீடு அமைந்திருந்தது. சாலையை நேராக அமைக்க அந்த வீட்டை இடிக்க வேண்டியது அவசியமாக இருந்தது.


​இதற்காக சீன அரசு ஹுவாங் பிங்கிற்கு சுமார் $200,000 (இந்திய மதிப்பில் சுமார் 1.6 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க முன்வந்தது. ஆனால், தனது பூர்வீக வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாத பிங், அந்தப் பெருந்தொகையை ஏற்க மறுத்து வீட்டை காலி செய்ய முடியாது என பிடிவாதம் பிடித்தார்.

​அரசின் அதிரடி முடிவு
​பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிங் பணியாததால், சீன அரசு திட்டத்தை நிறுத்த விரும்பவில்லை.

 பொறியாளர்கள் சாலையின் வரைபடத்தை மாற்றியமைத்தனர். அதன்படி, அந்த வீட்டை இடிக்காமல், அதைச் சுற்றி ஒரு வளைவை ஏற்படுத்தி நான்கு வழிச் சாலையை அமைத்தனர். 

இன்று அந்த இரண்டு அடுக்கு மாடி வீடு, நான்கு புறமும் சீறிப்பாயும் வாகனங்களுக்கு நடுவே ஒரு 'தனித்தீவு' போல காட்சியளிக்கிறது.
 
​வெற்றி பெற்றுவிட்டதாக முதலில் நினைத்த பிங், தற்போது தனது முடிவிற்காக வருத்தப்படுகிறார். நெடுஞ்சாலை செயல்பாட்டிற்கு வந்த பிறகு 24 மணி நேரமும் வாகனங்கள் செல்லும் சத்தத்தாலும், வெளியேறும் புகையினாலும் அங்கு வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
​  
அமைதியைத் தேடி பிங் மற்றும் அவரது 11 வயது பேரன், பகல் நேரங்களில் வீட்டைப் பூட்டிவிட்டு நகரத்திற்குள் சென்றுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments