6th Science - 3rd Term - அன்றாட வாழ்வில் வேதியியல்

அன்றாட வாழ்வில் வேதியியல்

 

1. ஒரு பொருள் புதிய பொருளை உருவாக்கும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
வேதியியல் மாற்றம்

2. பொருள்களின் வடிவம் அளவு மற்றும் பருமனில் மட்டும் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
இயற்பியல் மாற்றம்

3. வேதியியலாளர்கள் எந்தப் பொருளை இயற்கை நிறங்காட்டியென அழைக்கின்றனர்?
Answer:
மஞ்சள்

4. நாம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு எந்த இரண்டு வேதிப்பொருளால் ஆனது?
Answer:
சோடியம் குளோரின்

5. இட்லி மாவில் மிருதுவான இட்லி தயாரிக்க பாக்டீரியாக்கள் நிகழ்த்தும் எந்த வேதி மாற்றம் காரணமாக அமைந்துள்ளது
Answer:
நொதித்தல்

6. வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கான காரணம்?
Answer:
புரோப்பேன் தயால் S ஆக்சைடு

7. சோப்பு மூலக்கூறுகளுக்கு எத்தனை முனைகள் உண்டு ? அவை என்னென்ன?
Answer:
இரண்டு : நீர் விரும்பும் பகுதி, நீர் வெறுக்கும் பகுதி

8. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் எதை நோக்கிச் செல்லும் ?
Answer:
துணியில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பொருளை நோக்கி

9. சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
Answer:
சோடியம் ஹைட்ராக்சைடு

10. தாவரங்களுக்குத் தேவையான மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Answer:
முதன்மை ஊட்டச்சத்துக்கள்

11. முதன்மை ஊட்டச் சத்துக்கள் என்னென்ன?
Answer:
நைட்ரஜன்பாஸ்பரஸ், பொட்டாசியம்

12. பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிம பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
உரங்கள்

13. தாவரங்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது? அவை என்னென்ன?
Answer:
இரண்டு வகை: கனிம மற்றும் கரிம வகை உரம்

14. நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்குக் கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
கரிம உரம்

15. மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தொழிற்சாலைகளில் வேதி மாற்றத்துக்கு உட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
கனிம உரங்கள்

16. யூரியா உரத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
Answer: 46%

17. சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ் எத்தனை சதவீதம் உள்ளது?
Answer: 8- 9
சதவீதம்

18. அமோனியம் சல்பேட் உரத்தில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
Answer: 21%

19. பொட்டாசியம் நைட்ரேட் உரத்தில் பொட்டாசியம் எத்தனை சதவீதம் உள்ளது?
Answer: 44%

20. 50 கிலோ கிராம் யூரியாவை பயன்படுத்தும்போது எத்தனை கிலோ கிராம் நைட்ரஜன் மண்ணில் சேர்க்கப்படுகிறது?
Answer: 23
கிலோ கிராம்

21. உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது?
Answer:
மண்புழு

22. சிமெண்ட் எவற்றையெல்லாம் உள்ளடக்கியுள்ளது ?
Answer:
சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம்

23. சிமெண்ட்டின் கெட்டிப்படும் நேரத்தைத் தாமதமாக்குவது எது?
Answer:
ஜிப்சம்

24. எந்த ஆண்டு முதன் முதலில் சிமெண்ட் கண்டுபிடிக்கப்பட்டது?
Answer: 1824

25. சிமெண்ட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
Answer:
வில்லியம் ஆஸ்பிடின்இங்கிலாந்து

26. சிமெண்ட் மணலுடன் நீரும் கலந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
காரை

27. சிமெண்ட் மணல் ஜல்லி கற்கள் நீர் சேர்ந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
கற்காரை

28. இரும்புக் கம்பிகள் அல்லது எஃகு வலைகளைக் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
வலுவூட்டப்பட்ட காரை

29. ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
Answer:
கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்

30. ஜிப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
Answer: CaSO4.2H2O

31. ஜிப்சத்தின் பயன்கள் என்னென்ன?
Answer:
உரமாக, சிமெண்ட் & பாரிஸ் சாந்து தயாரிப்பில் பயன்படுகிறது

32. எப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
Answer:
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்

33. எப்சத்தின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
Answer: MgSO4.7H2O

34. மருத்துவத்துறையில் மனிதனின் மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்தியாகப் பயன்படுவது எது ?
Answer:
எப்சம்

35. தோல்நோய்களை தீர்க்கும் களிம்புகளில் பயன்படுத்தப்படுவது?
Answer:
எப்சம்

36. விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படுவது?
Answer:
எப்சம்

37. பாரிஸ் சாந்தின் வேதியியல் பெயர் என்ன?
Answer:
கால்சியம் சல்பேட் ஹெமிஹைடிரேட்

38. பாரிஸ் சாந்து மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
Answer: CaSO4,½H2O

39. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் எங்கு அதிகளவில் கிடைக்கிறது?
Answer:
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ்

40. பாரிஸ் சாந்துவின் பயன்கள் என்னென்ன?
Answer:
கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க, சிகிச்சையில் எலும்பு முறிவுகளை சரிசெய்யசிலைகள் வார்ப்பதற்குகட்டுமானத்துறையில் பயன்படுகிறது

41. பீனால் என்பது ____கரிம அமிலம்.
Answer:
கார்பாலிக் அமிலம்

42.பீனாலின் மூலக்கூறு வாய்ப்பாடு?
Answer: C6H5OH

43. பீனாலின் தன்மை என்ன?
Answer:
வீரியம் குறைந்த அமிலம்.ஆவியாகும் தன்மையுள்ள வெண்மை நிற படிகம்

44. பினாலின் கரைசல் நிறம் அற்றதாக இருப்பினும் மாசு காரணமாக எந்த நிற கரைசலாக மாற்றமடைகிறது?
Answer:
இளம் சிவப்பு

45. ஒரு பரப்பின் மீதோ அல்லது இரண்டு வெவ்வேறு பொருள்களின் பரப்பின் மீதோ பூசப்படும் ஒருவகையான பசை போன்ற பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
ஒட்டும் பொருள்

46. இயற்கையான ஒட்டு பொருளுக்கு எடுத்துக்காட்டு எது?
Answer:
நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்

 


Post a Comment

0 Comments