வட இந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

 

1. யாருடைய வருகையால் வேத காலம் எனும் காலகட்டம் தொடங்கியது?
Answer:
ஆரியர்

2. இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பதன் காலம் என்ன?
Answer:
கிமு 1500 முதல் 600 வரை

3. இந்தோ-ஆரிய மொழி பேசும் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் யார்?
Answer:
ஆரியர்கள்

4. ஆரியர்கள் இந்தியாவிற்கு எதன் வழியாக வந்தனர்?
Answer:
இந்துகுஷ் மலைகளில் உள்ள கைபர் கணவாய்

5. ஆரியர்களின் முதன்மை தொழில் எது?
Answer:
கால்நடைகளை மேய்ப்பது

6. ஆரியர்கள் என்ன வேளாண் முறையைப் பின்பற்றினர்?
Answer:
அழித்து, எரித்துச் சாகுபடி செய்யும் முறை(slash and burn)

7. வேதகால நாகரிகம் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது?
Answer:
இரும்பு காலம்

8. வேதகால நாகரிகத்தின் இயல்பு என்ன ?
Answer:
கிராம நாகரிகம்

9. ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் எது?
Answer:
பஞ்சாப்

10. பஞ்சாபில் ஆரியர்கள் வாழ்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
Answer:
சப்தசிந்து

11. சப்தசிந்து என்பதன் பொருள் என்ன?
Answer:
ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி

12. கிமு 1000ல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து எந்தப்பகுதியில் குடியமர்ந்தனர்?
Answer:
சிந்து கங்கை சமவெளி

13. ஆரியர்கள் எந்த உலோகத்தினாலான பொருட்களை பரவலாகப் பயன்படுத்தினர் ?
Answer:
இரும்பு

14. நான்கு வேதங்கள் என்னென்ன ?
Answer:
ரிக், யஜுர்,சாம, அதர்வன

15. வேதங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
Answer:
இரண்டு: சுருதிகள், ஸ்மிருதிகள்

16. சுருதிகள் எவற்றை உள்ளடக்கியது?
Answer:
நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்கள்

17. புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை எனக் கருதப்பட்டவை எது?
Answer:
சுருதிகள்

18. சுருதி என்பதன் பொருள் என்ன ?
Answer:
கேட்டல் (அல்லது எழுதப்படாதது)

19. ஸ்மிருதிகள் எவற்றை உள்ளடக்கியது ?
Answer:
ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம்குறித்த போதனைகள் கொண்ட நூல்கள்.

20. எது நிலையானவை அல்ல மற்றும் தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை ?
Answer:
ஸ்மிருதிகள்

21. ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?
Answer:
இறுதியான எழுதப்பட்ட பிரதி

22. இந்தியாவின் தேசிய குறிக்கோளான 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer:
முண்டக உபநிடதம்

23. வேத காலம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
Answer:
இரண்டு: தொடக்க வேதகாலம் அல்லது முன் வேதகாலம் மற்றும் பின் வேதகாலம்

24. தொடக்க வேத காலத்தின் காலம் என்ன?
Answer:
கிமு 1500 முதல் 1000 வரை

25. பின் வேத காலத்தின் காலம் என்ன?
Answer:
கிமு 1000 முதல் 600 வரை

26. ரிக்வேத காலத்தில் அரசியலின் அடிப்படை அலகு எது?
Answer:
குலம்(clan)

27. ரிக்வேத காலத்தில் குலத்தின் தலைவர் யார் ?
Answer:
குலபதி

28. ரிக்வேத காலத்தில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
ஒரு கிராமம்

29. ரிக்வேத காலத்தில் கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
Answer:
கிராமணி

30. ரிக்வேத காலத்தில் பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:
விஸ்

31. ரிக்வேத காலத்தில் 'விஸ்' என்பதன் தலைவர் யார் ?
Answer:
விசயபதி

32. ரிக்வேத காலத்தில் 'ஜனா' இனக் குழுவின் தலைவர் யார்?
Answer:
ராஜன்

33. ரிக்வேத காலத்தில் ராஜன் வேறு எவ்வாறு அழைக்கப்படுவார்?
Answer:
ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்)

34. ரிக்வேத காலத்தில் இருந்த இனக்குழு அரசுகள் என்னென்ன ?
Answer:
பரதர், மத்சயர்,புரு போன்றவைகள்

35. ராஜனின் முக்கிய பொறுப்பு என்ன ?
Answer:
தனது இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பது

36. ராஜனின் அதிகாரம் எந்த இனக்குழு மன்றங்களால் கட்டுப்படுத்தப்பட்டது?
Answer:
விதாதா, சபா, சமிதி, கணா

37. நான்கு இனக்குழு மன்றங்களில் மிகவும் பழமையானது எது?
Answer:
விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு)

38. மூத்தோர்களை கொண்ட மன்றம் எது?
Answer:
சபா

39. மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு?
Answer:
சமிதி

40. அரசர் தனக்கு உதவி செய்வதற்காக யாரை பணியில் அமர்த்திக் கொண்டார்?
Answer:
புரோகிதர் (தலைமை குரு)

41. அரசியல், பொருளாதாரம், இராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு உதவி செய்தவர் யார்?
Answer:
சேனானி (படைத்தளபதி)

42. பின் வேதகாலத்தில் பல ஜனங்கள் அல்லது இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு எது உருவானது?
Answer:
ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள்

43. பின் வேத காலத்தில் எந்த இனக்குழு மன்றங்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன?
Answer:
சமிதி, சபா

44. மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்து வந்த காணிக்கையாக என்ன பெயர்?
Answer:
பாலி

45. எந்தக் காலத்தில் பாலி ஒருவரியாக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது?
Answer:
பின் வேத காலம்

46. குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் எது?
Answer:
பின் வேத காலம்

47. அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்கள் எந்தக் காலகட்டத்தில் உருவாகின?
Answer:
பின் வேத காலம்

48. பாலி என்ற வரியில் ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் எத்தனை பங்கை வரியாகச் செலுத்த வேண்டும்?
Answer: 1/6
பங்கு

49. வேதகால சமூகம் யாரை முதன்மைப்படுத்தும் சமூகமாகும் ?
Answer:
தந்தை வழி சமூகம்

50. கருப்பு நிற ஆரியரல்லாத மக்களை எவ்வாறு அழைத்தனர்?
Answer:
தசயுக்கள், தாசர்கள்

51. தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் எத்தனை பிரிவுகள் காணப்பட்டது?
Answer:
மூன்று

52. வேதகால சமூகத்தில் பொது மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Answer:
விஸ்

53. வேதகால சமூகத்தில் போர் வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Answer:
சத்ரியர்கள்

54. வேதகால சமூகத்தில் மதகுருமார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Answer:
பிராமணர்கள்

55. வேதகால சமூகத்தில் எத்தனை வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது?
Answer:
நான்கு :பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்

56. ரிக்வேத கால சமூகத்தில் குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டவர் யார் ?
Answer:
மனைவி

57. ஆரியர்களின் முதன்மை பயிர் எது?
Answer:
யவா (பார்லி)

58. வேதகால மக்கள் பயன்படுத்திய தங்க நாணயங்களின் பெயர் என்ன?
Answer:
நிஷ்கா, சத்மானம்

59. வேதகால மக்கள் பயன்படுத்திய வெள்ளி நாணயங்களின் பெயர் என்ன?
Answer:
கிருஷ்ணாலா

60. ரிக் வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் மற்றும் அவற்றின் பெயர்கள் என்னென்ன?
Answer:
தங்கம் (ஹிரன்யா), இரும்பு (சியாமா), தாமிரம்/செம்பு (அயாஸ்)

61. ரிக் வேத கால மக்கள் என்ன கடவுளை வணங்கினர்?
Answer:
பிருத்வி(நிலம்), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன்(மழை), இந்திரன் (இடி)

62. ரிக்வேத காலத்தில் வழங்கப்பட்ட பெண் தெய்வங்கள் என்னென்ன ?
Answer:
அதிதி (நித்திய கடவுள்), உஷா (விடியற்காலை தோற்றம்)

63. ரிக்வேத காலத்தில் மக்கள் எதற்காகத் தெய்வங்களை வணங்கினர்?
Answer:
குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா) ஆகியவற்றின் நலனுக்காக

64. பின் வேதகாலத்தில் என்ன கடவுள்கள் முக்கியத்துவம் பெற்றனர் ?
Answer:
பிரஜாபதி (படைப்பவர்), விஷ்ணு(காப்பவர்), ருத்ரன் (அழிப்பவன்)

65. குருகுலம் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது ?
Answer:
சமஸ்கிருதம்: குரு (ஆசிரியர்), குலம் (குடும்பம் அல்லது வீடு) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டு

66. யார் மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாகச் சேர்க்கப்படுவர் ?
Answer:
இருபிறப்பாளர்கள் (Dvijas)

67. பின் வேத கால இறுதியில் வயதின் அடிப்படையில் வாழ்க்கையின் நான்கு நிலைகள் என்னென்ன ?
Answer:
பிரம்மச்சரியம் (மாணவப்பருவம்), கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை), வனப்பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்), சன்னியாசம் (மோட்சம் அடைவதற்காகத் துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்)

68. வட இந்தியாவின் தொடக்ககால வேதப் பண்பாடு இந்திய துணைக்கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய எந்தக் கால பண்பாட்டோடு ஒத்துப்போகிறது ?
Answer:
செம்புகால பண்பாடு

69. முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகால பண்பாடு எது?
Answer:
இந்தியாவின் செம்புகால பண்பாடு

70. வட இந்தியாவின் பின் வேதகால பண்பாடும், தென்னிந்தியாஎந்தப் பண்பாடும்எந்த பண்பாடும்சம காலத்தைச் சேர்ந்தவை ?
Answer:
இரும்புக்காலம்

71. இரும்பு காலத்தின் முடிவில் மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டில் எப்போது அடியெடுத்து வைத்தனர்?
Answer:
கி.மு. 200 முதல் கிபி 100 வரை தொடங்கியது

72. கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள் எந்தக் காலகட்டத்தில் ஒரு கூறாக உள்ளது ?
Answer:
பெருங்கற்காலம்

73. பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: Megalithic age

74. Megalithic என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது மற்றும் அதன் பொருள் என்ன?
Answer:
கிரேக்கம்: mega என்றால் பெரிய, lith என்றால் கல் என்று பொருள்

75. இறந்தவர்களைப் புதைத்தஇடங்களைக் கற்பலகைகள் கொண்டு மூடியதால் அக்காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer:
பெருங்கற்காலம்

76. கீழடி எங்கு அமைந்துள்ளது?
Answer:
திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்

77. 2017ஆம் ஆண்டில் கீழடியிலிருந்து இரு மாதிரிகளை இந்திய தொல்லியல் துறை கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் கணிக்க எங்கு அனுப்பியது?
Answer:
அமெரிக்காவில் புளோரிடா எனும் இடத்தில் உள்ள பீட்டா அனாலிடிக் என்ற நிறுவனம்

78. கீழடியில் கிடைத்த பொருட்கள் கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது?
Answer:
கிமு 200

79. கீழடியில் எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருள்கள் கிடைத்துள்ளன?
Answer:
ரோம்

8இந்தியாவிலிருந்துதீபகற்பவில் இருந்துஎஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும், அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் குறிப்பிடுபவர் யார்?
Answer:
பெரிப்ளஸ்

81. பழங்கால மக்களின் அரிசி நிரம்பிய பானை எங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
Answer:
பொருந்தல் திண்டுக்கல் மாவட்டம்

82. இரும்பு உருக்கப்பட்ட அதற்கான சான்றுகள் எங்குக் கிடைத்துள்ளது?
Answer:
பையம்பள்ளி வேலூர் மாவட்டம்

83. கொடுமணல் என்னும் ஊர் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?
Answer:
பதிற்றுப்பத்து

84. இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
முதுமக்கள் தாழிகள்

85. இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும் இக்கற்திட்டைகள் எங்கா காணப்படுகிறது?
Answer:
வீரராகவபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்), கும்மாளமருதுப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்), நரசிங்கம்பட்டி (மதுரை மாவட்டம்)

86. ஒரே கல்லிலான தூண்கள் இறந்தோரின் நினைவாகச் செங்குத்தாக நடப்படும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: Menhir

87. Menhir என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது மற்றும் அதன் பொருள் என்ன?
Answer:
பிரிட்டானிய மொழி : மென் என்றால் கல், கிர் என்றால் நீளமான என்று பொருள்

88. Menhir என்றழைக்கப்படும் நினைவுத் தூண்கள் எந்த இடங்களில் காணப்படுகிறது ?
Answer:
திருப்பூர் மாவட்டம் சிங்கிரிபாளையம், தேனி மாவட்டம் வெம்பூர், மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, ஈரோடு மாவட்டம் குமரிக்கல்பாளையம், கொடுமணல்

89. இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
நடுகற்கள்

90. நடுகற்கள் எந்தந்த இடங்களில் காணப்படுகின்றன?
Answer:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் புலிமான் கோம்பை போன்ற இடங்களில்.