இந்திய ரயில்வேயில் 3445 பணியிடங்கள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…



இந்திய ரயில்வேயில் கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க், மற்றும் பயிற்சி கிளார்க் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3445 பணியிடங்கள் ரயில்வேயில் புதிதாக நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலிபணியிடங்கள்: 3445

கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணியிடம்: 2022

கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வழக்கமான வயது தளர்வுடன் கொரோனா காலம் காரணமாக 3 ஆண்டுகள்வரை வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் ஆரம்ப நிலை : 21700 ரூபாய் (லெவல் 3)

அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க், மற்றும் பயிற்சி கிளார்க் பணியிடங்கள்: 19900

அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க், மற்றும் பயிற்சி கிளார்க் பதவிகளுக்கு 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வழக்கமான வயது தளர்வுடன் கொரோனா காலம் காரணமாக 3 ஆண்டுகள்வரை வயது சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் ஆரம்ப நிலை : 19900 ரூபாய் (லெவல் 2)

விண்ணப்பிப்பது எப்படி: சென்னை, அஹமதாபாத், பெங்களூர், முஸாபர்நகர், கொல்கத்தா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், மும்பை, சண்டிகர், சிலிகுரி, செகந்திராபாத், ராஞ்சி, பிரக்யாராஜ், பட்னா, மால்டா, சண்டிகர், பிலாஸ்பூர், குவஹாத்தி, கோரக்பூர், ஜம்மு ஸ்ரீநகர், சிலிகுரி உள்பட மண்டல அலுவலகங்களுக்குத் தனித்தனியாக உள்ள ஆர்ஆர்பி தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 21.09.2024

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.10.2024

கல்வி தகுதி, முழு சம்பள விவரம் மற்றும் தகுதிகள் உள்பட முழு விவரங்களை https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அல்லது செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் விவரமாகப் பார்க்கலாம். எந்தக் காரணம் கொண்டு அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம் என்றும், பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று வரும் புரோக்கர்களையும் நம்ப வேண்டாம் என்றும் ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Official Notification  -        DOWNLOAD