பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம்


 1. அண்டத்தைப் பற்றிப் படிக்கும் படிப்பின் பெயர்?

Answer: அண்டவியல் cosmology

2. காஸ்மாஸ் என்பது எந்த மொழிச்சொல்?
Answer:
கிரேக்கம்

3. பேரண்டம் எப்போது உருவானதாக நம்பப்படுகிறது?
Answer: 15
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

4. ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
விண்மீன் திரள் மண்டலம்

5. பெரு வெடிப்புக்குப் நிகழ்விற்கு பின் சுமார் எத்தனை வருடங்களுக்குப் பின் பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் உருவானது?
Answer: 5
பில்லியன் வருடங்களுக்குப் பின்

6. புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?
Answer:
ஆண்ட்ரோமெடா மற்றும் மெகல்லனிக் க்ளவுட்ஸ்

7. ஓர் ஓளியானது ஓராண்டு பயணிக்கும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
ஒரு ஒளியாண்டு

8. ஒளியின் திசை வேகம் வினாடிக்கு எவ்வளவு?
Answer:
மூன்று லட்சம் கிலோ மீட்டர்

9. ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
Answer:
வினாடிக்கு 330 மீட்டர்

10. சோலார் என்பது எந்த மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Answer:
இலத்தீன் (sol)

11. Sol என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் என்ன?
Answer:
சூரியக்கடவுள்

12. சூரியன் சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
Answer: 99.8%

13. சூரியன் எந்த வாயுக்களால் ஆனது?
Answer:
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

14. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை?
Answer: 6000°C

15. பூமியின் சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை வந்தடைய எடுத்துக்கொள்ளும் காலம்?
Answer: 8.3
நிமிடங்கள்

16. கோள் என்றால் என்ன பொருள்?
Answer:
சுற்றி வருபவர்

17. எந்த இரு கோள்களைத் தவிர மற்ற பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகார சுற்றில் சுற்றி வருகிறது?
Answer:
வெள்ளி மற்றும் யுரேனஸ்

18. "வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு" என்ற பாடல் பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் எனக் குறிக்கும் எந்தச் சங்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
Answer:
சிறுபாணாற்றுப்படை

19. உட்புற கோள்கள் என அழைக்கப்படுபவை?
Answer:
புதன் வெள்ளி பூமி மற்றும் செவ்வாய்

20. உட்புற கோள்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
புவிநிகர் கோள்கள்

21. வெளிப்புற கோள்கள் என அழைக்கப்படுபவை எவை?
Answer:
வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

22. வெளிப்புறக் கோள்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
வியாழன் நிகர் கோள்கள்

23. வெளிப்புறக் கோள்களிலா வாயுக்கள் நிறைந்து காணப்படுவதால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
வளிமக் கோள்கள்

24. சிறு கோள் மண்டலம் எந்த இரு கிரகங்களுக்கு இடையே காணப்படுகிறது?
Answer:
செவ்வாய் வியாழன்

25. சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகச்சிறிய கோள் எது?
Answer:
புதன்

26. புதன் கிரகமானது எந்தக் கடவுளின் பெயரால் மெர்குரியென அழைக்கப்படுகிறது?
Answer:
ரோமானிய கடவுள்களின் தூதுவர்

27. இரட்டை கோள்கள் என அழைக்கப்படுபவை எவை?
Answer:
வெள்ளி மற்றும் பூமி

28. வெள்ளி கிரகம் தன்னை தானே சுற்றி கொள்ள எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறது?
Answer: 243
நாட்கள்

29. வெள்ளி கிரகம் எந்தத் திசையில் சுற்றுகிறது?
Answer:
கிழக்கிலிருந்து மேற்காக

30. வெள்ளி கிரகம் எந்தக் கடவுளின் பெயரால் வீனஸ் என அழைக்கப்படுகிறது?
Answer:
அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுள்

31. வெள்ளி கிரகம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
விடிவெள்ளி மற்றும் அந்தி வெள்ளி

32. நிலவிற்கு அடுத்தபடியாக இரவில் பிரகாசமாகத் தெரியும் விண் பொருள் எது?
Answer:
வெள்ளி

33. சூரிய குடும்பத்தில் புவியானது எத்தனையாவது மிகப்பெரிய கோள்?
Answer:
ஐந்தாவது

34. பூமி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
நீலக்கோள் மற்றும் நீர் கோள்

35. நமது சூரிய குடும்பத்தில் ரோமானிய மற்றும் கிரேக்க கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள் எது?
Answer:
புவி

36. புவியின் துருவ விட்டம் எவ்வளவு?
Answer: 12,714
கிலோமீட்டர்

37. புவியின் நிலநடுக்கோட்டு விட்டம் எவ்வளவு?
Answer: 12,756
கிலோமீட்டர்

38. பூமி சூரியனை வினாடிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது ?
Answer: 30
கிலோமீட்டர்

39. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு?
Answer: 150
மில்லியன் கிலோமீட்டர்

40. நபது சூரிய குடும்பத்தின் இரண்டாவது மிகச் சிறிய கோள் ?
Answer:
செவ்வாய்

41. செவ்வாய் எந்தக் கடவுளின் பெயரால் மார்ஸ் என அழைக்கப்படுகிறது?
Answer:
ரோமானிய போர்க்கடவுள்

42. செவ்வாயின் வேறு பெயர் என்ன?
Answer:
சிவந்த கொள்

43. செவ்வாய்க் கோள் சிகப்பு நிறமாகக் காட்சி அளிப்பதற்கான காரணம் என்ன?
Answer: மேற்பரப்பில் உள்ள
 இரும்பு ஆக்சைடு

44. செவ்வாயின் துணைக்கோள்கள் என்னென்ன ?
Answer:
இரண்டு : ஃபோபஸ் மற்றும் டீமஸ்

45. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதி ஆராய்வதற்காக எந்த ஆண்டு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது?
Answer: 24.09.2014

46. செவ்வாய் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது ?
Answer: 4-
வது இடம்

47. சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள்?
Answer:
வியாழன்

48. வியாழன் கிரகம் சூரியனிடமிருந்து எத்தனையாவதாக அமைந்துள்ளது?
Answer:
ஐந்தாவது

49. வியாழன் கிரகம் எந்தக் கடவுளின் பெயரால் ஜுபிடர் என அழைக்கப்படுகிறது ?
Answer:
ரோமானியர்களின் முதன்மை கடவுள்

50. நிலா மற்றும் வெள்ளிக்கு அடுத்ததாகப் பிரகாசமாக விண்ணில் தெரிவது?
Answer:
வியாழன் கிரகம்

51. நமது சூரிய குடும்பத்தில் எந்தக் கோள் தன்னச்சில் மிகவும் வேகமாகச் சுழல்கிறது?
Answer:
வியாழன்

52. வியாழனுடைய மிகப்பெரிய துணைக்கோள்கள் என்னென்ன ?
Answer:
ஐயோ, யூரோப்பா, கனிமீடு மற்றும் கேலிஸ்டோ

53. சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள்?
Answer:
சனி

54. சூரிய குடும்பத்தில் சனி கிரகம் சூரியனிலிருந்து எத்தனாவது அமைந்துள்ளது?
Answer:
ஆறாவது

55. சனி கிரகம் எந்தக் கடவுளின் பெயரால் சாட்டர்ன்(saturn) என அழைக்கப்படுகிறது ?
Answer:
ரோமானிய வேளாண்மை கடவுள்

56. சனி கிரகம் எத்தனை துணைக் கோள்களைக் கொண்டுள்ளது ?
Answer: 62
துணைக்கோள்கள்

57. சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கோள் எது?
Answer:
டைட்டன்

58. சூரிய குடும்பத்தில் காணப்படும் துணைக் கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களைக் கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள் எது?
Answer:
டைட்டன்

59. எந்த ஆண்டு யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது?
Answer: 1781

60. யுரேனசைக் கண்டுபிடித்த வானியல் அறிஞர் யார்?
Answer:
வில்லியம் ஹெர்ஷல்

61. தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் எது?
Answer:
யுரேனஸ்

62. யுரேனஸ் சூரியனிடமிருந்து எத்தனாவதாக அமைந்துள்ளது ?
Answer:
ஏழாவது

63. யுரேனஸ் பச்சை நிறமாகத் தோன்றுவதற்கு காரணம் ?
Answer:
மீத்தேன் வாயு

64. யுரேனஸ் எந்தக் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது?
Answer:
கிரேக்க விண் கடவுள்

65. எந்தக் கிரகத்தின அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டு ஓடுவது போன்று சூரியனை சுற்றி வருகிறது?
Answer:
யுரேனஸ்

66. யுரேனஸின் மிகப்பெரிய துணைக்கோள் எது?
Answer:
டைட்டானியா

67. ரோமானிய கடல் கடவுளின் பெயரைக் கொண்ட கிரகம் எது?
Answer:
நெப்டியூன்

68. நெப்டியூனின் மிகப்பெரிய துணைக்கோள் எது?
Answer:
டிரைட்டன்

69. நெப்டியூனில் காணப்படும் எந்த நிறம் யுரேனஸ் கோளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது?
Answer:
நீலம் மற்றும் வெள்ளை

70. சூரிய குடும்பத்தில் காணப்படும் ஐந்து குறுங்கோள்கள் என்னென்ன?
Answer:
புளூட்டோ, செரஸ், ஈரிஸ், மேகமேக் மற்றும் ஹௌமியா

71. நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும் புவியை சுற்றி வரவும் எடுத்துக்கொள்ளும் நேரம்?
Answer: 27
நாட்கள் 8 மணி நேரம்

72. நிலவு புவியிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது?
Answer: 384400
கி.மீ

73. நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவில் அனுப்பப்பட்ட முதல் விண்கலம்?
Answer:
சந்திராயன்-1

74. சந்திராயன்-1 எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?
Answer: 2008

75. சூரியனை சுற்றி வரும் சிறிய திடப் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer:
சிறுகோள்கள்

76. எந்தக் கோள்களுக்கிடையே சிறுகோள்கள் மண்டலம் காணப்படுகிறது ?
Answer:
செவ்வாய் மற்றும் வியாழன்

77. புவிக்கு அருகில் 76 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய விண்மீன் எது?
Answer:
ஹேலி

78. ஹேலி விண்மீன் கடைசியாக எந்த ஆண்டு வானில் தென்பட்டது?
Answer: 1986

79. புவியின் மேற்பரப்பை தாக்கும் விண்கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer:
விண்வீழ்கற்கள்

80. புவி தன் அச்சில் எவ்வளவு சாய்ந்து தன்னைத்தானே சுற்றி வருகிறது?
Answer: 23½

81. நில நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழலும் வேகம் எவ்வளவு ?
Answer: 1670
கிலோமீட்டர் /மணி

82. 60° வடக்கு அட்சரேகையில் புவியின் சுழலும் வேகம் எவ்வளவு?
Answer: 845
கி.மீ/மணி

83. புவியின் சுழலும் வேகம் எங்குச் சுழியமாக இருக்கும்?
Answer:
துருவம்

84. புவியானது எந்தத் திசையில் சுழலுகிறது?
Answer:
மேற்கிலிருந்து கிழக்காக

85. பூமியானது ஒரு முறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்?
Answer: 23
மணிநேரம் 56 நிமிடங்கள் 4.09 விநாடிகள்

86. புவியின் ஒளிபடும் பகுதியையும் ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு என்ன பெயர் ?
Answer:
ஒளிர்வு வட்டம்

87. எந்தக் காலம்வரை புவியின் வட அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்து காணப்படும்?
Answer:
மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை

88. புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்விற்கு என்ன பெயர்?
Answer:
சூரிய அண்மை(perihelion)

89. புவி தம் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு தொலைவில் காணப்படும் நிகழ்வு
Answer:
சூரிய சேய்மை(aphelion)

90. எந்தக் காலம்வரை புவியின் தென் அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்து காணப்படும்?
Answer:
செப்டம்பர் 23 வரை முதல் மார்ச் 21

91. எந்த நாட்களில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும்?
Answer:
மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

92. சம பகலிரவு நாட்கள் என அழைக்கப்படுபவை?
Answer:
மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

93. எப்போது கடகரேகை மீது சூரியனின் செங்குத்து கதிர்கள் விழுவதால் வட அரைக்கோளத்தில் மிக நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் ?
Answer:
ஜூன் 21

94. எந்த நாள் கோடை கால கதிர் திருப்பம் என அழைக்கப்படுகிறது ?
Answer:
ஜூன் 21

95. எந்த நாள் குளிர் கால கதிர் திருப்பம் என அழைக்கப்படுகிறது?
Answer:
டிசம்பர் 22

96. குளிர்கால கதிர் திருப்பத்தின்போது சூரியனின் செங்குத்து கதிர்கள் எந்த ரேகையின் மீது விழும்?
Answer:
மகரரேகை

97. உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
உயிர்க்கோளம்

98. லித்தோஸ்பியர்(lithosphere) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Answer:
கிரேக்கம்

99. லித்தோஸ் என்ற கிரேக்க பதத்திற்கு என்ன பொருள்?
Answer:
பாறை

100. ஹைட்ரோஸ்பியர்(hydrosphere) என்ற சொல் எந்தச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Answer:
கிரேக்கம்

101. அட்மாஸ்பியர் (atmosphere) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Answer:
கிரேக்கம்

102. வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் முதன்மையான வாயுக்கள் எவை?
Answer:
நைட்ரஜன் 78% மற்றும் ஆக்ஸிஜன் 21%

103. பயோ என்ற கிரேக்கச் சொல்லுக்கு என்ன பொருள் ?
Answer:
உயிர்

104. மன்னார் உயிர்கோள பெட்டகம் இந்திய பெருங்கடலில் எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது?
Answer: 10,500