நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

 1. புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது ?
Answer: 71%

2. புவியின் எத்தனை சதவீதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது?
Answer: 29
சதவீதம்

3. முதல்நிலைத் நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுபவை?
Answer:
கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்

4. சங்க இலக்கியத்தில் நில வகைப்பாடு எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது ?
Answer: 5:
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை

5. மலையும் மலை சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
குறிஞ்சி

6. காடும் காடு சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer:
முல்லை

7. வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
மருதம்

8. கடலும் கடல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer:
நெய்தல்

9. மணலும் மணல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
பாலை

10. மிகப் பெரிய நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
கண்டங்கள்

11. பரந்த நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer:
பெருங்கடல்கள்

12. உலகில் எத்தனை கண்டங்கள் உள்ளன ?
Answer:
ஏழு

13. உலகில் உள்ள கண்டங்கள் என்னென்ன?
Answer:
ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா

14. உலகின் மிகப்பெரிய கண்டம் எது ?
Answer:
ஆசியா

15. உலகின் மிகச்சிறிய கண்டம் ?
Answer:
ஆஸ்திரேலியா

16. புவியில் எத்தனை பெருங்கடல்கள் காணப்படுகின்றன?
Answer:
ஐந்து

17. புவியில் உள்ள பெருங்கடல்கள் என்னென்ன?
Answer:
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பெருங்கடல், மற்றும் ஆர்டிக் பெருங்கடல்

18. இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர் பரப்புகளைத் பிரிக்கக் கூடியதுமான மிகக்குறுகிய நிலப்பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer:
நிலச்சந்தி

19. மிகப்பெரிய பெருங்கடல் எது ?
Answer:
பசுபிக் பெருங்கடல்

20. மிகச்சிறிய பெருங்கடல் எது?
Answer:
ஆர்க்டிக் பெருங்கடல்

21. இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுபவை?
Answer:
மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள்

22. சுற்றுப்புற நிலப்பகுதியைவிட எத்தனை உயரத்துக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் என அழைக்கப்படும்?
Answer: 600
மீட்டர்

23. தொடர்ச்சியாக நீண்டு காணப்படும் மலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
மலைத்தொடர்

24. இமய மலைத்தொடர் எங்கு உள்ளது ?
Answer:
ஆசியா

25. ராக்கி மலைத்தொடர் எங்கு உள்ளது?
Answer:
வட அமெரிக்கா

26. ஆண்டிஸ் மலைத்தொடர் எங்குள்ளது?
Answer:
தென் அமெரிக்கா

27. ஒரு மலைத்தொடரின் உயரமான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer:
சிகரம்

28. உலகிலேயே உயரமான சிகரம் எது?
Answer:
இமய மலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரம்

29. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன ?
Answer: 8848
மீட்டர்

30. சர்வதேச மலைகள் தினம் எப்போது ?
Answer:
டிசம்பர் 11

31. சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
பீடபூமி

32. உலகத்தின் கூரையென அழைக்கப்படுவது எது?
Answer:
பீடபூமி

33. உலகிலேயே உயர்ந்த பீடபூமி எது?
Answer:
திபெத் பீடபூமி

34. பீடபூமி சமமான மேற்பரப்பை கொண்டுள்ளதால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
மேசை நிலம்

35. சோட்டா நாகபுரி பீடபூமி எங்கு உள்ளது?
Answer:
இந்தியா

36. தென்னிந்தியாவில் உள்ள தக்காண பீடபூமி எதனால் ஆனது?
Answer:
எரிமலை பாறைகள்

37. தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகள் என்னென்ன?
Answer:
தர்மபுரி பீடபூமி, கோயம்புத்தூர் பீடபூமி, மற்றும் மதுரை பீடபூமி

38. கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
சமவெளிகள்

39. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சமவெளிகள் எந்த ஆறுகளால் உருவாக்கப்பட்டவை?
Answer:
காவிரி மற்றும் வைகை

40. பண்டைய நாகரீகங்களின் தொட்டில் என அழைக்கப்படுபவை?
Answer:
ஆற்று சமவெளிகள்

41. ஆறுகள் பனியாறுகள் காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கிய செயல்கள் என்ன?
Answer:
அழித்தல் மற்றும் படிய வைத்தல்

42. புவியின் மேற்பரப்பில் உள்ள பொருள்களை அரித்து அகற்றுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
அரித்தல்

43. அரிக்கப்பட்ட பாறைத் துகள்கள் கடத்தப்பட்டு தாழ்நிலப் பகுதிகளில் படிய வைக்கப்படுகின்றன இச்செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
படிய வைத்தல்

44. விண்வெளியிலிருந்து பார்க்கும்போது புவி என்ன நிறமாகக் காட்சியளிக்கும் ?
Answer:
நீலநிறம்

45. உலகில் உள்ள பெரும் கடல் பரப்பில் பசுபிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
Answer: 47%

46. உலகில் உள்ள பெரும் கடல் பரப்பில் அட்லாண்டிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது ?
Answer: 23%

47. உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் இந்திய பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
Answer: 20%

48. உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் தென் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
Answer: 6
சதவீதம்

49. உலகில் உள்ள பெருங்கடல்களில் ஆர்டிக் பெருங்கடல் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
Answer: 4%

50. புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் எது?
Answer:
பசிபிக் பெருங்கடல்

51. பசுபிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை பகுதியைக் கொண்டுள்ளது?
Answer:
மூன்றில் ஒரு பகுதி

52. பசுபிக் பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு ?
Answer: 168. 72
மில்லியன் சதுர கிலோமீட்டர்

53. பசிபிக் பெருங்கடலின் மேற்கில் எவை எல்லைகளாக அமைந்துள்ளன?
Answer:
ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா

54. பசுபிக் பெருங்கடலின் கிழக்கில் எல்லைகளாக அமைந்துள்ளவை எவை?
Answer:
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

55. பசிபிக் பெருங்கடல் என்ன வடிவத்தில் காணப்படுகிறது?
Answer:
முக்கோண வடிவம்

56. பசிபிக் பெருங்கடலின் நிலையும் ஆர்க்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது?
Answer:
பெரிங் நீர்ச்சந்தி

57. புவியின் ஆழமான பகுதி எது?
Answer:
மரியானா அகழி

58. மரியானா அகழியின் ஆழம் எவ்வளவு ?
Answer: 10994
மீட்டர்

59. பசுபிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
Answer:
பேரிங் கடல், சீனக் கடல், ஜப்பான் கடல், தாஸ்மானியா கடல், பிலிப்பைன்ஸ் கடல்

60. பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன ?
Answer:
இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், நியூஸிலாந்து

61. பசிபிக் பெருங்கடலை பற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:
நெருப்பு வளையம்

62. பசிபிக் எனப் பெயரிட்டவர் யார் ?
Answer:
ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன்

63. பசுபிக் என்பதன் பொருள் என்ன?
Answer:
அமைதி

64. புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல் எது?
Answer:
அட்லாண்டிக் பெருங்கடல்

65. அட்லாண்டிக் பெருங்கடல் பரப்பளவு எவ்வளவு?
Answer: 85.13
மில்லியன் சதுர கிலோமீட்டர்

66. அட்லாண்டிக் பெருங்கடல் புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை பங்கைக் கொண்டுள்ளது?
Answer:
ஆறில் ஒரு பங்கு

67. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளவை ?
Answer:
கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா மேற்கே வட அமெரிக்கா தென் அமெரிக்கா

68. அட்லாண்டிக் பெருங்கடல் என்ன வடிவத்தைப் போன்று உள்ளது?
Answer:
ஆங்கில எழுத்து S

69. அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது ?
Answer:
ஜிப்ரால்டர்

70. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
Answer:
போர்டோ ரிக்கோ அகழியில் காணப்படும் மில்வாக்கி அகழி

71. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எத்தனை மீட்டர் ஆழமுடையது?
Answer: 8600
மீட்டர்

72. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
Answer:
கரீபியன் கடல், மெக்சிகோ வளைகுடா, வடகடல், கினியா வளைகுடா, மத்தியதரைக்கடல்

73. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன?
Answer:
செயின்ட் ஹெலனா, நியூபவுண்ட்லாந்து, ஐஸ்லாந்து, ஃபாக்லாந்து

74. இந்திய பெருங்கடல் புவியின் எத்தனையாவது மிகப்பெரிய பெருங்கடல் ?
Answer:
மூன்றாவது

75. இந்தியப் பெருங்கடலின் பரப்பு எவ்வளவு ?
Answer: 70.56
மில்லியன் சதுர கிலோமீட்டர்

76. இந்திய பெருங்கடல் என்ன வடிவத்தைக் கொண்டுள்ளது?
Answer:
முக்கோண வடிவம்

77. இந்திய பெருங்கடல் என்ன கண்டங்களால் சூழப்பட்டுள்ளது?
Answer:
மேற்கு ஆப்பிரிக்கா வடக்கே ஆசியா, கிழக்கே ஆஸ்திரேலியா

78. இந்திய பெருங்கடலில் காணப்படும் தீவுகள் என்னென்ன?
Answer:
அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், இலங்கை, மொரீஷியஸ், ரியூனியன் தீவுகள்

79. இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்சந்தி எது?
Answer:
மலாக்கா நீர் சந்தி

80. இந்திய பெருங்கடலில் எல்லையோர கடலாக அமைந்துள்ளவை எவை?
Answer:
வங்காள விரிகுடா, அரபிக் கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல்

81. இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
Answer:
ஜாவா அகழி

82. ஜாவா அகழியின் ஆழம் என்ன ?
Answer: 7,725
மீ

83. வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கும் நீர் சந்தி எது?
Answer:
பாக் நீர் சந்தி

84. இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கும் கால்வாய்?
Answer: 6
டிகிரி கால்வாய்

85. மாலத் தீவையும் மினிகாய் தீவையும் பிரிக்கும் கால்வாய்?
Answer: 8
டிகிரி கால்வாய்

86. லட்சத்தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கும் கால்வாய்?
Answer: 9
டிகிரி கால்வாய்

87. அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கும் கால்வாய்?
Answer: 10
டிகிரி கால்வாய்

88. தென் பெருங்கடல் எந்தக் கண்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது?
Answer:
அண்டார்டிகா

89. தென்பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு?
Answer: 21.96
மில்லியன் சதுர கிலோமீட்டர்

90. தென்பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
Answer:
ராஸ் கடல், வெடல் கடல், மற்றும் டேவிஸ் கடல்

91. தென்பெருங்கடலில் உள்ள தீவுகள் என்னென்ன ?
Answer:
ஃபேர்வெல் தீவு, பௌமன் தீவு, ஹாட்ஸ் தீவு

92. தென்பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
Answer:
தென் சான்ட்விச் அகழி

93. தென் சான்ட்விச் அகழியின் ஆழம் என்ன?
Answer: 7,235
மீ.

94. ஆர்க்டிக் பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு?
Answer: 15.56
மில்லியன் சதுர கிலோமீட்டர்

95. ஆர்க்டிக் பெருங்கடலின் எல்லையோர கடல்கள் என்னென்ன?
Answer:
நார்வே கடல், கிரீன்லாந்து கடல், கிழக்கு சைபீரியக் கடல் மற்றும் பேரண்ட் கடல்

96. ஆர்க்டிக் பெருங்கடலில் காணப்படும் தீவுகள் என்னென்ன?
Answer:
கிரீன்லாந்து தீவு, நியூ சைபீரிய தீவு மற்றும் நவோயா செமல்யா தீவு

97. ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி எது?
Answer:
யுரேசியன் தாழ்நிலம்

98. யுரேசியன் தாழ்நிலத்தின் ஆழம் என்ன?
Answer: 5449
மீட்டர்