மனித உறுப்பு மண்டலங்கள்

 

1. அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்து உறுப்புகளின் கூட்டமைப்பால் உருவானது எது?
Answer:
உறுப்பு மண்டலம்

2. உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட பணியை செய்தல்____ எனப்படும்.
Answer:
உறுப்பு மண்டலம்

3. நமது உடலில் எத்தனை உறுப்பு மண்டலங்கள் உள்ளன?
Answer:
எட்டு

4. நமது உடலில் உள்ள உறுப்பு மண்டலங்கள் என்னென்ன ?
Answer:
எலும்பு மண்டலம், தசை மண்டலம், செரிமான மண்டலம், சுவாச மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், கழிவு நீக்க மண்டலம்

5. மனிதனின் எலும்பு மண்டலம் எத்தனை எலும்புகளை உடையது ?
Answer: 206

6. எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
Answer: ?
இரண்டு பிரிவுகள்: அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம்

7. மனித உடலின் செங்குத்தான அச்சை உருவாக்குவது எது?
Answer:
அச்சு சட்டகம்

8. அச்சுச்சட்டகமானது என அழைக்கப்படுபவை எவை?
Answer:
மண்டையோடு, முதுகெலும்புத் தொடர், விலா எலும்புக் கூடு

9. மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கைக்கால் எலும்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது எது?
Answer:
இணையுறுப்புச் சட்டகம்

10. வாய்க்குழியின் அடித்தளத்தில் காணப்படும் எழும்பு எது?
Answer:
ஹயாய்டு எலும்பு

11. நமது முகத்திலேயே எந்த எலும்பு மிகப்பெரியது மட்டும் உறுதியானது ?
Answer:
கீழ்த்தாடை எலும்பு

12. விலா எலும்புக் கூடு எத்தனை இணைகள் கொண்ட வளைந்த தட்டையானஎலும்புகளைக் கொண்டுள்ளதுவிலா எலு கொண்டுள்ளது
Answer:
பன்னிரண்டு இணைகள்

13. மனிதனின் கைக்கால் எலும்புகள் எத்தனை இணைகளைக் கொண்டவை?
Answer:
இரண்டு: முன்னங்கை & பின்னங்கால்

14. நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச் சிறியது எது?
Answer:
உள் காதில் உள்ள அங்கவடி (stapes)

15. அங்கவடி (stapes) நீளம் என்ன?
Answer: 2.8
மில்லி மீட்டர்

16. நமது உடலில் உள்ள நீளமான எலும்பு?
Answer:
தொடை எலும்பு

17. மனிதனின் எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன ?
Answer: 206

18. உடலில் எத்தனை வகை தசைகள் உள்ளன?
Answer:
மூன்று: எலும்புத் தசைகள், மென் தசைகள், இதயத் தசைகள்

19. நம் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படும் தசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: ?
இயக்கு தசைகள்

20. உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசைகள் எது?
Answer:
மென் தசைகள்

21. மென் தசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
கட்டுப்படாத இயங்கு தசைகள்

22. இதய தசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
விருப்பத்திற்கு ஏற்பக் கட்டுப்படாத இயங்கு தசைகள்

23. உணவுக்குழாய் எவ்வளவு நீளம் உடைய தசையால் ஆன நீண்ட குழல் ஆகும்?
Answer: 9
மீட்டர்

24. செரிமான சுரப்பிகள் என அழைக்கப்படுபவை?
Answer:
உமிழ்நீர் சுரப்பிகள், இரைப்பை சுரப்பிகள், கல்லீரல், கணையம், குடல் சுரப்பிகள்

25. உமிழ்நீரில் ஸ்டார்ச்சினை சிதைக்கக்கூடிய எந்த நொதி அமைந்துள்ளது?
Answer:
அமைலேஸ்

26. சிறுகுடல் எத்தனை மீட்டர் நீளமுடையது?
Answer: 6
மீட்டர்

27. சுவாச பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கும் அமைப்பு எது?
Answer:
குரல்வளைமூடி (எப்பிகிளாட்டிஸ்)

28. நுரையீரலைச் சுற்றி இரு அடுக்குகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புப் படலம் காணப்படுகிறது. அதற்கு என்ன பெயர்?
Answer:
ப்ளூரா

29. நாசித் துவாரங்களின் வழியாகக் காற்றில் உள்ள ஆக்சிஜன் உள்ளிழுக்கப்பட்டு நுரையீரல்களில் உள்ள கார்பன்டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
வெளிசுவாசம்

30. ரத்த ஓட்ட மண்டலம் வழியாக ஆக்சிஜன் உடல் முழுவதும் அழிக்கப்பட்டு அங்குள்ள கார்பன்-டை-ஆக்சைடு எடுத்துச் செல்லப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
உட்சுவாசம்

31. செல்கள் வழியாக ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.இதற்கு என்ன பெயர்?
Answer:
செல்சுவாசம்

32. எந்த வாயு சுண்ணாம்பு நீரைப் பாலாக மாற்றும் தன்மையுடையது?
Answer:
கரியமிலவாயு

33. மனிதனின் ஒவ்வொரு நுரையீரலிலும் ஏறக்கூடிய எத்தனை மில்லியன் நுண் காற்றுப் பைகள் உள்ளன?
Answer: 300
மில்லியன்

34. நமது உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவு சத்துப்பொருட்கள், ஹார்மோன்கள், கழிவு ப்பொருள்கள் போன்றவற்றை கடத்துகிறது?
Answer:
ரத்த ஓட்ட மண்டலம்

35. இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?
Answer:
நான்கு அறைகள்

36. இதயம் இரு சுவர்களைக் கொண்ட எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது?
Answer:
பெரிகார்டியம்

37. நமது உடலில் எத்தனை வகையான ரத்தக்குழாய்கள் உள்ளன?
Answer:
மூன்று

38. மூன்று வகையான ரத்தக் குழாய்கள் என்னென்ன?
Answer:
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள்

39. இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்?
Answer:
மூன்று வகைப்படும்

40. ரத்த அணுக்களின் வகைகள் என்னென்ன ?
Answer:
இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், இரத்தத் தட்டுகள்

41. இரத்த சிவப்பு அணுக்கள் எங்கு உருவாக்கப்படுகின்றன ?
Answer:
எலும்பு மஜ்ஜை

42. நாடித்துடிப்பு எதனால் ஏற்படுகிறது?
Answer:
தமனியில் செல்லும் ரத்த ஓட்டத்தினால்

43. ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு?
Answer: 72
முதல் 80 வரை

44. வலது வென்டிரிக்கிளிலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்வது எது?
Answer:
நுரையீரல் தமனி

45. நுரையீரலிலிருந்து இரத்தத்தை இடது ஏட்ரியத்திற்கு எடுத்துச் செல்வது எது?
Answer:
நுரையீரல் சிரை

46. இதயத்திலிருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் குருதியை எடுத்துச் செல்லப் பயன்படுவது எது ?
Answer:
தமனிகள்

47. தமனிகள் எந்த நிறத்தில் காணப்படுகின்றன ?
Answer:
வெளிர் சிவப்பு

48. உடலின் பிற பகுதிகளிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு வருவது எது?
Answer:
சிரைகள்

49. சிரைகள் என்ன நிறத்தில் காணப்படுகின்றன?
Answer:
கருஞ்சிவப்பு

50. மூளையை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
Answer:
மூன்று

51. மூளையின் பிரிவுகள் என்னென்ன?
Answer:
முன் மூளை, நடுமூளை மற்றும் பின் மூளை

52. உடலின் மத்திய கட்டுப்பாட்டு மையம் என அழைக்கப்படுவது எது ?
Answer:
மூளை

53. மூளையில் ஒருவர் தனது வாழ்நாளில் சேமித்து வைக்கக்கூடிய தகவல்கள் எவ்வளவாகக் கூறப்படுகிறது?
Answer: 100
மில்லியனுக்கும் மேல்

54. கண் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
Answer:
மூன்று:கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி

55. சுவையானது எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது ?
Answer:
மூன்று: புறச்செவி, நடுச்செவி உட்செவி

56. மனித உடலின் மிகப்பெரிய உணர் உறுப்பு எது?
Answer:
தோல்

57. நாளமில்லா சுரப்பி மண்டலம் உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
ஹார்மோன்கள்

58. பிட்யூட்டரி சுரப்பியின் இருப்பிடம் எது?
Answer:
மூளையின் அடிப்பகுதி

59. பீனியல் சுரப்பியின் இருப்பிடம் எது?
Answer:
மூளையின் அடிப்பகுதி

60. தைராய்டு சுரப்பியின் இருப்பிடம் எது ?
Answer:
கழுத்து

61. தைமஸ் சுரப்பியின் இருப்பிடம் எது?
Answer:
மார்புக்கூடு

62. கணையத்தின் இருப்பிடம் எது?
Answer:
வயிற்றின் அடிப்பகுதி

63. அட்ரினல் சுரப்பியின் இருப்பிடம் எது?
Answer:
சிறுநீரகத்திற்கு மேல்

64. இனப்பெருக்க உறுப்புகளின் இடம் இருப்பிடம் எது?
Answer:
இடுப்புக்குழி

65. சிறுநீரகங்கள் என்ன வடிவத்தில் உள்ளன?
Answer:
அவரை விதை வடிவம்

66. சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு எது?
Answer:
நெஃப்ரான்கள்

67. நமது உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
Answer: 70%

68. நமது மூளையில் உள்ள சாம்பல் நிறப்பகுதியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
Answer: 85%

69. கொழுப்பு செல்களில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
Answer: 15%

70. நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்துகிறோம்?
Answer: 1.5
முதல் 3.5 லிட்டர் வரை