செல்

 

1. முதன்முதலில் செல் என்ற சொல்லினை பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கியவர் யார்?
Answer:
ராபர்ட் ஹூக்

2. ராபர்ட் ஹூக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Answer:
இங்கிலாந்து

3. மைக்ரோகிராபியா எனும் நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்?
Answer: 1665

4. செல் என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Answer:
லத்தீன்

5. செல்லுலா என்னும் லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் என்ன?
Answer:
சிறிய அறை

6. செல்லைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன ?
Answer:
செல் உயிரியல்

7. செல் எத்தனை முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது?
Answer:
மூன்று

8. செல்லின் முக்கிய பகுதிகள் என்னென்ன?
Answer:
செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு, திரவநிலை சைட்டோபிளாசம், உட்கரு

9. செல்லின் பல்வேறு பணிகளைச் செய்வதற்காகச் செல்லினுள் பல உறுப்புகள் காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer:
செல் நுண்ணுறுப்புகள்

10. ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
மைக்ரோ மீட்டர்

11. பாக்டீரியாக்கள் எந்த அளவில் காணப்படுகின்றன?
Answer: 0.1
முதல் 0.5 மைக்ரோமீட்டர்

12. ஒரு செல்லால் ஆன நெருப்புக் கோழியின் முட்டையின் விட்டம் எவ்வளவு?
Answer: 170
மில்லிமீட்டர்

13. நமது உடலில் மிக நீளமான செல்லாகக் கருதப்படுவது எது?
Answer: நரம்புச் செல்

14. பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ் மற்றும் ஈஸ்ட் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
Answer:
ஒருசெல் உயிரினம்

15. ஸ்பைரோகைரா எதற்கு எடுத்துக்காட்டு?
Answer:
பல செல் உயிரினம்

16. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer: 3.7x10^13 (or) 37000000000000

17. பொதுவாகச் செல்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது?
Answer:
இரண்டு: புரோகேரியாட்டிக் மற்றும் யூகேரியாட்டிக் செல்கள்

18. தெளிவான உட்கருவினை கொண்டிருக்காத செல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
புரோகேரியாட்டிக் செல்

19. புரோகேரியாட்டிக் செல்களின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
Answer:
நியூக்ளியாய்டு

20. இப்புவியில் முதன் முதலில் உருவான செல் எது?
Answer:
புரோகேரியாட்டிக் செல்

21. புரோகேரியாட்டிக் செல்லின் அளவு என்ன?
Answer: 0.003
மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் வரை

22. தெளிவான உட்கருவை கொண்டுள்ள செல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
யூகேரியாட்டிக் செல்கள்

23. எந்தச் செல்கள் ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவையாக உள்ளன?
Answer:
புரோகேரியாடிக் செல்

24. எந்தச் செல்கள் பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவையாக உள்ளன?
Answer:
யூகேரியாட்டிக் செல்

25. எந்தச் செல் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை?
Answer:
புரோகேரியாடிக் செல்

26. எந்தச் செல் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகிறது?
Answer:
யூகேரியாடிக் செல்

27. எந்தச் செல்களில் நியுக்ளியோலஸ் காணப்படுவதில்லை?
Answer:
புரோகேரியாடிக் செல்

28. எந்தச் செல்களில் நியுக்ளியோலஸ் காணப்படும்?
Answer:
யூகேரியாட்டிக் செல்

29. தாவரங்கள் மற்றும் விலங்குகள் செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
Answer:
யூகேரியாட்டிக் செல்கள்

30. எந்தச் செல்களில் சென்டிரியோல் காணப்படுவதில்லை?
Answer:
தாவர செல்கள்

31. விலங்குச் செல்கள் எப்போதும் எந்த வடிவில் இருக்கும்?
Answer:
கோள வடிவம்

32. செல்லைப் பாதுகாத்து செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையை தருவது ஆகிய முக்கிய பணிகளை மேற்கொள்ளும் செல்லின் பாகம் எது?
Answer:
செல்சுவர்

33. செல்சுவரின் சிறப்புப் பெயர் என்ன?
Answer:
தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர்

34. செல் இருக்கு பாதுகாப்பு தருவது செல்லின் போக்குவரத்திற்கு உதவுவது எது ?
Answer:
செல் சவ்வு

35. செல் சவ்வின் சிறப்புப் பெயர் என்ன?
Answer:
செல்லின் கதவு

36. நீர் அல்லது ஜெல்லி போன்ற செல்லில் உள்ள நகரும் பொருள் எது?
Answer:
சைட்டோபிளாசம்

37. சைட்டோபிளாசமனத்தின் சிறப்புப் பெயர் என்ன ?
Answer:
செல்லின் நகரும் பகுதி

38. செல்லிற்கு தேவையான அதிக சக்தியை உருவாக்கித் தருவது எது?
Answer:
மைட்டோகாண்ட்ரியா

39. மைட்டோகாண்ட்ரியா எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
செல்லின் ஆற்றல் மையம்

40. பசுங்கணிகம் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
செல்லின் உணவுத் தொழிற்சாலை

41. செல்லின் மூளையாகச் செயல்படுவது எது?
Answer:
உட்கரு

42. உட்கருவின் சிறப்புப் பெயர் என்ன?
Answer:
செல்லின் கட்டுப்பாட்டு மையம்

43. நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புவது எது?
Answer:
உட்கரு உறை

44. உட்கரு உறையின் வேறு பெயர்?
Answer:
உட்கரு வாயில் () உட்கரு கதவு