மின்னியல்


1. மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
மின் மூலங்கள்

2. தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்களுள்ள இடம்?
Answer:
கடலூர் மாவட்டம் நெய்வேலி, திருவள்ளூர் மாவட்டம் எண்ணுர்

3. தமிழ்நாட்டில் நீர்மின் நிலையங்களுள்ள இடம்?
Answer:
சேலம் மாவட்டம் மேட்டூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்

4. தமிழ்நாட்டில் அணுமின் நிலையங்களுள்ள இடம் ?
Answer:
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம்

5. தமிழ்நாட்டில் காற்றாலை அமைந்துள்ள இடம்?
Answer:
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு

6. அனல் மின் நிலையங்களில் எந்த ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?
Answer:
வெப்ப ஆற்றல்

7. நீர் மின் நிலையங்களில் எந்த ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?
Answer:
இயக்க ஆற்றல்

8. அதிக காலம் இயங்கக் கூடியவை மற்றும் சிக்கனமான மின் நிலையங்கள் எது?
Answer:
நீர் மின் நிலையங்கள்

9. அணுமின் நிலையங்களில் என்ன ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?
Answer:
அணு ஆற்றல், இயக்க ஆற்றல்

10. காற்றாலை மின் நிலையங்களில் என்ன ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது ?
Answer:
இயக்க ஆற்றல்

11. வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் கருவியின் பெயர் என்ன?
Answer:
மின்கலன்

12. மின்கலங்களில் நீர் மற்றும் எதிர்மின் அயனிகளைத் தரக்கூடிய எது மின்பகுளி ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது?
Answer:
வேதி கரைசல்

13. தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதை பொறுத்து மின்கலன்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன ? அவை என்னென்ன?
Answer:
இரண்டு: முதன்மை மின்கலன்கள் மற்றும் துணைமின் கலன்கள்

14. எந்த வகை மின்கலங்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது?
Answer:
முதன்மை மின்கலன்கள்

15. சுவர் கடிகாரம் கைக்கடிகாரம் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் எது?
Answer:
முதன்மை மின்கலன்

16. பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய மின்கலன் எது ?
Answer:
துணை மின்கலன்

17. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்களை இணைத்து எது உருவாக்கப்படுகிறது?
Answer:
மின்கல அடுக்கு

18. மின்கலத்தின் நேர் முனையிலிருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதைக்கு என்ன பெயர் ?
Answer:
மின்சுற்று

19. மின்னோட்டத்தை தேவையானபோது செலுத்தவோ நிறுத்தவோ பயன்படும் அமைப்பின் பெயர் என்ன?
Answer:
சாவி

20. ஒரு மின்சுற்றில் சாவியானது திறந்த நிலையில் இருந்தால் அந்த மின்சுற்றில் மின்னோட்டம் செல்லாது.அத்தகைய மின்சுற்று எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
திறந்த மின்சுற்று

21. மின்சுற்றின் வகைகள் என்னென்ன?
Answer:
எளிய மின்சுற்று, தொடர் இணைப்பு, பக்க இணைப்பு

22. ஒரு சாவி, ஒரு மின்கலன் மற்றும் இணைப்புக் கம்பி கொண்டு உருவாக்கப்படும் மின்சுற்று எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
எளிய மின்சுற்று

23. ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்குகள் தொடராக இருக்குமாறு சாவி மின்கலன் மற்றும் இணைப்புக் கம்பிகள்மூலம் இணைக்கப்படும் மின்சுற்று எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
தொடரிணைப்பு மின்சுற்று

24. எந்த மின்சுற்றில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்தாலும் மின்சுற்று தொடர்பில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்?
Answer:
தொடரிணைப்பு மின்சுற்று

25. ஒன்றுக்கும் மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக இருக்குமாறு சாவிகள் மின்கலன் மற்றும் இணைப்புக் கம்பிகள் கொண்டு உருவாக்கப்படும் இணைப்பு?
Answer:
பக்க இணைப்பு மின்சுற்று

26. மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் எது?
Answer:
ஈல்

27. ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவி எது ?
Answer:
அம்மீட்டர்

28. அம்மீட்டர் கருவியானது மின்சுற்றில் எந்த இணைப்பில் இணைக்கப்பட வேண்டும்?
Answer:
தொடர் இணைப்பு

29. கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே எவ்வாறு அழைக்கப்படும்?
Answer:
மின்னோட்டம்

30. எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்?
Answer:
மின்கடத்திகள்

31. எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்கள் செல்ல அனுமதிக்கவில்லையோ அவற்றை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்?
Answer:
அரிதிற்கடத்திகள் அல்லது மின்கடத்தாப் பொருள்கள்

32. தாமஸ் ஆல்வா எடிசனின் காலம் என்ன ?
Answer:
பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18 1931

33. தாமஸ் ஆல்வா எடிசன் எந்த நாட்டு கண்டுபிடிப்பாளர் ?
Answer:
அமெரிக்கா

34. ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை உருவாக்கி உள்ளவர் யார்?
Answer:
தாமஸ் ஆல்வா எடிசன்

35. மைக்கேல் பாரடேவின் காலம் ?
Answer: 1791-1867

36. டைனமோவை கண்டறிந்தவர் யார்?
Answer:
மைக்கேல் ஃபாரடே

37. "எனக்கு விருதுகள் எதுவும் தேவையில்லை. அறிவியல் மக்களுக்குப் பயன்பட வேண்டும்.கடைசிவரை சாதாரண மக்களின் விஞ்ஞானி ஆகவே வாழ விரும்புகிறேன்" எனக்கூறிய விஞ்ஞானி யார்?
Answer:
மைக்கேல் ஃபாரடே