ஒலிம்பிக் போட்டி பற்றிய சிறப்புத் தகவல்

1896ஆம் ஆண்டு தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப்பட்டது முதல் 22 வெவ்வேறு நகரங்களில் 27 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் 19 வெவ்வேறு நகரங்களில் 22 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் நடத்தப்பட்டுள்ளன. 

இது தவிரவும், மூன்று கோடைக்கால மற்றும் இரண்டு குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதாயிருந்து அந்த போட்டிகள்  உலகப் போரினால் ரத்து செய்யப்பட்டன.

 

அவை :

1916இல் பெர்லின் (கோடை), 1940இல் தோக்கியோ (கோடை) மற்றும் சப்போரோ (குளிர்), 1944இல் இலண்டன் (கோடை) மற்றும் இத்தாலி (குளிர்).

  1. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
  2. 1894 - பெரிடி குப்ரடின் நவீன ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைத்தார்.
  3. 1894 - தலைமையிடம் - லொசேன் ( சுவிட்சர்லாந்து )
  4. 1896 - ( ஏப்ரல் 6 ) - முதல் ஒலிம்பிக் போட்டி - ஏதென்ஸ் ( கிரிஸ் )
  5. 1912 - முதன் முதலில் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டனர்.
  6. 1920 - முதல் முதலில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. ( பெல்ஜியம் )
  7. 1924 - முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ( பிரான்ஸ் )
  8. 1928 - முதன்முதலில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ( பெர்லின் - ஜெர்மன் )
  9. 1846 - கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ( கிரீஸ் )
  10. 1924 - முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ( பிரான்ஸ் )
  11. 2016 - கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இடம் - ரியோ ( பிரேசில் )
  12. 2021 - கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்ற இடம் - டோக்கியோ ( ஜப்பான் ).