கடலோர காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்புத் தகுதி; 300 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க...!

 கடலோர காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்புத் தகுதி; 300 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க...!


இந்திய கடலோர காவல் படையில் Navik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

அதிகாரத்தின் பெயர்

Tamil Nadu Police CID Recruitment 2025 

பதவியின் பெயர்

Navik(GD) 

மொத்த காலியிடங்கள்

300

வயது வரம்பு 

18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம் 

₹21,700

விண்ணப்பம் தொடங்கும் தேதி

11.02.2025

விண்ணப்பிக்கக் கடைசி தேதி

25.02.2025

விண்ணப்பக் கட்டணம்

₹300

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம்

தேர்வுத் தேதி

அறிவிக்க வேண்டும்

அதிகாரப்பூர்வ இணையதளம்

 https://joinindiancoastguard.cdac.in/ 

பணியின் விவரங்கள்

  • இந்திய கடலோர காவல் படையில் நேவிக் பதவியில் ஜென்ரல் டியூட்டி மற்றும் டொமெஸ்டிக் பிராஞ்ச் என மொத்தம் 300 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • நேவிக் ஜென்ரல் டியூட்டி கீழ் 260 காலிப்பணியிடங்களும், டொமெஸ்டிக் பிராஞ்ச் கீழ் 40 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி

  • நேவிக் ஜென்ரல் டியூட்டி பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம்கீழ் 12-ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • நேவிக் டொமெஸ்டிக் பிராஞ்ச் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம்கீழ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

  • இந்திய கடலோர காவல்படையில் நேவிக் பதவிகளுக்கு 4 கட்ட தேர்வு முறை உள்ளது. முதலில் கணினி வழி ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவை நடத்தப்படும். தொடர்ந்து, இறுதி பட்டியல் வெளியாகிச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்னப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 11-ம் தேதி முதல் தொடங்கும்


இந்திய கடலோர காவல் படையில் சேர வேண்டும் எனக் கனவுடன் இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பம் தொடங்கி பின்னர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாதுகாப்பு படையில் சேர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments