தாவரங்கள் உலகம்

 1. உயிரினங்களின் வாழ்க்கை முறை, அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றிப் பயிலும் இயற்கை அறிவியல் எது ?
Answer: உயிரியல்

2. பூக்கும் தாவரங்கள் எத்தனை முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன? அவை என்னென்ன?
Answer: இரண்டு, தண்டுத் தொகுப்பு வேர் தொகுப்பு

3. நிலத்துக்குக் கீழே காணப்படும் தாவரத்தின் முக்கிய அச்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: வேர்

4. வேர்கள் எந்தப் புவி நாட்டம் உடையவை ?
Answer: நேர் புவி நாட்டம்

5. வேர் தொகுப்புகள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன ?
Answer: இரண்டுவகை :ஆணி வேர்த்தொகுப்பு, சல்லி வேர் தொகுப்பு

6. எந்த வேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாகின்றது ?
Answer: முளை வேர்

7. எந்தத் தாவரங்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது ?
Answer: இருவித்திலைத் தாவரங்கள்

8. சல்லி வேர்த்தொகுப்பு எந்தத் தாவரங்களிலும் காணப்படுகிறது ?
Answer: ஒருவித்திலைத் தாவரங்கள்

9. நெல், புல், மக்காச்சோளம் முதலியவற்றின் என்ன வேர்த்தொகுப்பு காணப்படுகிறது தொகுப்பு?
Answer: சல்லிவேர்த்தொகுப்பு

10. கேரட், பீட்ரூட் போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எந்தப் பகுதியில் சேமிக்கின்றன?
Answer: வேர்கள்

11. நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற பகுதிக்கு என்ன பெயர்?
Answer: தண்டுத் தொகுப்பு

12. தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு என்ன பெயர் ?
Answer: கணு

13. இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கணுவிடைப்பகுதி

14. தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: நுனிமொட்டு

15. தண்டின் இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer: கோணமொட்டு

16. கரும்பு போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை எங்குச் சேமித்து வைக்கின்றன ?
Answer: தண்டுப்பகுதி

17. தாவரத்தின் பசுமையான தட்டையான பகுதிக்கு என்ன பெயர் ?
Answer: இலைத் தாள் அல்லது இலைப்பரப்பு

18. இலையின் மையத்தில் உள்ள முக்கிய நரம்பிற்கு என்ன பெயர்?
Answer: மைய நரம்பு

19. தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: இலையடிப்பகுதி

20. இலையடிப் பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன அதற்கு என்ன பெயர் ?
Answer: இலையடி செதில்கள்

21. இலைகள் பசுமை நிறத்தில் உள்ளதற்கான காரணம் ?
Answer: பச்சை நிறமிகளான பச்சையம்

22. தாவரத்தின் எந்தப் பாகத்தின் வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது?
Answer: இலைத்துளை

23. எந்தத் தாவரத்தின் இலைகள் 3 மீட்டர் விட்டம் வரை வளரும்?
Answer: விக்டோரியா அமேசோனிக்கா

24. நன்கு வளர்ச்சியடைந்த விக்டோரியா அமேசோனிக்காவின் இலையின் மேற்பரப்பு எத்தனை கிலோ எடையைத் தாங்கும்?
Answer: 45 கிலோ கிராம்

25. பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
Answer: இருவகைகள்: பூக்கும் தாவரம், பூவா தாவரம்

26. விதை அமைந்திருக்கும் தன்மையில் தாவரங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
Answer: இரண்டு வகைகள் : மூடிய விதை தாவரங்கள், திறந்த விதை தாவரங்கள்

27. மூடிய விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
Answer: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

28. திறந்த விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer: ஜிம்னோஸ்பெர்ம்கள்

29. ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Answer: வாழிடம்

30. நீர் வாழிடம் எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு வகைப்படும்: நன்னீர் வாழிடம் மற்றும் கடல்நீர் வாழிடம்

31. உலகில் உள்ள மிக நீளமான நதி எது?
Answer: நைல் நதி

32. நைல் நதியின் நீளம் என்ன?
Answer: 6650 கிலோமீட்டர்

33. இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
Answer: கங்கை

34. கங்கையின் நீளம் என்ன ?
Answer: 2525 கிலோமீட்டர்

35. பூமியின் மேற்பரப்பில் எத்தனை சதவீதம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது?
Answer: 70%

36. பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையின் எத்தனை சதவீதம் கடல் வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது?
Answer: 40%

37. நில வாழிடம் எத்தனை வகைப்படும் ?
Answer: மூன்று வகை: காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள்

38. உலகில் எத்தனை சதவீதம் நிலவாழிடங்கள் உள்ளன?
Answer: 28%

39. 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள் என்ன?
Answer: மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்

40. உலகிற்கான ஆக்சிஜன் தேவையில் பாதியை கொடுக்கும் காடுகள் எங்கு உள்ளது?
Answer: அமேசான் காடுகள், தென்னமெரிக்கா

41. நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள இடத்திற்குப் பெயர் என்ன?
Answer: பாலைவனம்

42. பாலைவனம் பெறும் ஆண்டின் சராசரி மழை அளவு எவ்வளவு குறைவாக இருக்கும் ?

Answer: 25 சென்டி மீட்டர்

43. பூமியில் சுமார் எத்தனை சதவீதம் பாலைவனம் உள்ளது?
Answer: 20%

44. கள்ளி தாவரங்கள் நீரை தனது எந்தப் பாகத்தில் சேமித்து வைக்கின்றன?
Answer: தண்டு

45. காடுகள் பெறும் ஆண்டு சராசரி மழையளவு எவ்வளவாக இருக்கும்?
Answer: 25 முதல் 200 சென்டிமீட்டர் வரை

46. எப்போது உலக வாழிட நாள் அனுசரிக்கப்படுகிறது ?
Answer: அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை

47. பட்டாணி, பாகற்காய் போன்ற மெலிந்த தண்டுடைய தாவரங்கள், ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு வளர்வதற்கு உதவியாக இருப்பவை ?
Answer: பற்றுக்கம்பிகள்

48. இனிப்பு பட்டாணியின் எந்தப் பாகம் பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளது ?
Answer: சிற்றிலைகள்

49. பாகற்காயின் எந்தப் பாகம் பற்று கம்பியாக மாற்றமடைந்துள்ளது ?
Answer: கோணமொட்டு

50. வளரும் பருவநிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் எது?
Answer: மூங்கில்

51. ரயில் கற்றாழையென அழைக்கப்படும் தாவரம் எது?
Answer: அகேவ்

52. அகேவ் தாவரத்தில் எந்தப் பகுதி முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது?
Answer: இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள்

53. சப்பாத்திக்கள்ளியின் எந்தப் பாகம் முட்களாக மாறியுள்ளது?
Answer: இலைகள்

54. காகிதப்பூ என அழைக்கப்படும் தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?
Answer: போகன்வில்லியா